பழைய மாணவர் சங்க நிர்வாக சபைக்கூட்டம்- 24/03/2019

கடந்த 24.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் தலைவர் திரு.சிவனேசன் தலைமையில் அக வணக்கத்துடன் இனிதே ஆரம்பமானது. தொடர்ந்து செயலாளரால் சென்ற கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு சரி என ஏற்றுக்கொள்ளப்படட்து.

சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல்

பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு எதிர் வரும் முத்துமாரி அம்மன் கோவில் சப்பர திருவிழாவன்று நடைபெறவுள்ளது.17/04/2019 அன்றைய தினம் மாலை 3 மணிக்கு சிதம்பராக்கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மேற்படி ஒன்று கூடலை சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் தாய் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

சிதம்பரா கல்லூரி மைதான சுற்றுமதில் கட்டுவதில் மக்களின் கருத்து.

கம்பரெலியா அபிவிருத்தி திடத்தின் கீழ் சிதம்பரா, மகளிர் மற்றும் தொண்டைமானாறு பாடசாலை மைதான அபிவிருத்திக்கு 1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை மண் நிரவி வாய்க்கால் நிர்மாணித்தல் கட்டு அமைத்தல் போன்ற அடிப்படை மேம்பாட்டு பணிகளை சிதம்பரா பழையமாணவர் சங்கம் தகுந்த நேரத்தில் செயற்படுத்தவும் மைதானதினுள் நிறுவப்பட்டுள்ள சுனாமி கோபுரத்தை பின் நகர்த்த தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் எழுத்து மூலம் வலய கல்வி பணிப்பாளருக்கு தெரிவித்துள்ளனர்.

சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும்(17.02.2019) இடம்பெற்றது​

சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின்(தாய்ச் சங்கம்) ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவு ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது.

செயலாளரின் அறிக்கை, பொருளாளரின் அறிக்கை என்பன சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்பட்டிருந்ததுடன் அவை சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.

புதிய நிர்வாக சபைத் தெரிவின் போது பின்வருவோர் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

சிதம்பரக் கல்லூரி வரவு செலவு அறிக்கை (01-07-2017 தொடக்கம் 31-01-2019)​​

சிதம்பரக் கல்லூரியின்  2017, 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை பொருளாளரினால் சமர்ப்பிக்கப்பட்டது 

                                         வரவு

நடைமுறை கணக்கு                                                                            560752.69 

சேமிப்பு கணக்கு                                                                                           1507.44         

சேமிப்பு கணக்கு                                                                                          29712.41                  

  கையிருப்பு                                                                                                              19.23

கொழும்பு ப.மா.ச                                                                                   433640.00