கல்லூரிக்கீதம்

திருவளர் கலைதரு சிதம்பராக் கல்லூரி
சேண்புகழ் ஓங்கியே வாழ்க!

மெஞ்ஞான இன்பம் மிகுஞான நிலையை
விஞ்ஞானந் தந்திட வாழ்க!

கல்வியே கண்னெனும் நன்மகா வாக்கியம்
கற்பவர் நெஞ்சினை யள்ள

சிதம்பரப் பிள்ளை வள்ளல்
செயலரசு தையல் பாகர்
சேவா நிலையமே வாழ்க!

மணிக்கொடி வல்வை மாநகர் எடுத்தே
வான்புகழ் ஓங்கியே வாழ்க!
வாழ்க வாழ்க வாழ்க!

சிதம்பராக் கல்லூரி வாழ்க- எங்கள்
சிதம்பராக் கல்லூரி வாழ்க!