பழைய மாணவர் சங்க நிர்வாக சபைக்கூட்டம்- 24/03/2019

கடந்த 24.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் தலைவர் திரு.சிவனேசன் தலைமையில் அக வணக்கத்துடன் இனிதே ஆரம்பமானது. தொடர்ந்து செயலாளரால் சென்ற கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு சரி என ஏற்றுக்கொள்ளப்படட்து.

பாடசாலை மைதான மதில் அமைத்தலை மேற்பார்வை செய்யவென உப குழு ஒன்று அமைக்கப்பட்டும் அவர்களிற்கான தகவல்கள் உரிய நேரத்தில் சென்றடையவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் மேற்படி தவறுகள் நடைபெறாது என உறுதியளிக்கப்பட்டது.

பாடசாலை மதில் அமைப்பதற்கு அன்பளிப்பு செய்தோர் விபரம் தரப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. கல்லூரி மைதான மதில் அமைப்பதில் உள்ள பிரச்சனையை கல்வி அமைச்சின் குழு மூலம் தீர்க்கப்படவேண்டும் என்றும் சிதம்பராகல்லூரி மைதான நில அளவையாளர் வரைபடம் (Surveyor Plan) பெறுவதற்கு அதிபரிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

இனிவரும் காலத்தில் பாடசாலையின் சகல அபிவிருத்தி திட்டங்களுக்கும் தேவையான நிதியினை தாய்ச்சங்கத்தின் மூலம் சேர்த்து நேரடியாக அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

கல்லூரியின் ஆரம்ப பிரிவு (1-5) மாணவர்களுக்கான வகுப்புகள் தற்காலிக காற்றோட்டமற்ற கட்டடத்தில் நடத்தப்படுவதால் புதிய கட்டிடம் ஒன்று அமைக்க வலய கல்வி அதிகாரி மற்றும் மாகாண கல்வி அமைச்சினால் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதற்காக கொழும்பு பழைய மாணவர் சங்கம், பிரித்தானிய பழைய மாணவர் சங்கம், வல்வை நலன்புரி சங்கங்கள் என்பவற்றிற்கு கட்டிடம் அமைப்பதற்கான நிதி உதவிக்கான கோரிக்கை கடிதம் ஒன்றினை வெளியிட வேண்டும் எனவும் சபை முடிவெடுத்தது.

பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினராக எமது சங்கத்தில் சாதாரண உறுப்பினர் ஒருவரும்  தலைமை உறுப்பினர் ஒருவருமாக இருவரின் பெயர் விபரம் பாடசாலைக்கு அனுப்பப்பட வேண்டும் என  முடிவெடுக்கப்பட்டது.

பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு ஒன்றினை நடாத்த வேண்டும் என்று தீர்மானித்து அதனை எதிர் வரும் முத்துமாரி அம்மன் கோவில் சப்பர திருவிழா 17/04/2019 மாலை 3.00 தொடக்கம் 6.00 மணி வரை நடாத்துவது என முடிவெடுக்கப்பட்டது . இதற்காக உபகுழு ஒன்று அமைக்கப்பட்டது.