பாடசாலை அபிவிருத்திச் சங்கம்

பாடசாலை அபிவிருத்தி சங்கம் எனப்படுவது  தேசிய கல்விக் கொள்கைகளுக்கு அமைவாக பாடசாலையில் கல்விப் பயன்பெறுவோரின் கல்வி எதிர்பார்ப்புக்கள்  மற்றும் நோக்கத்தினை நிறைவேற்றக் கூடியவாறும், பாடசாலை அமைந்துள்ள பிரதேசத்தில் சமூக, கலாசார மற்றும் பொருளாதார ரீதியில் விளைதிறன் மிக்க மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் அனுசரணையாக இருக்கும் விதத்தில் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பாகும்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் கட்டமைப்பு

01. பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள்.

02.பாடசாலை மாணவர்களின் தினவரவு இடாப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்மற்றும் சட்டரீதியிலான பாதுகாவலர்கள் (சட்ட ரீதியான பாதுகாவலர் எனப்படுவது பிள்ளைகளைச்சேர்த்துக் கொள்ளும் போது பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்).

03. பாடசாலையின் பழைய மாணவர்கள்.அங்கீகரிக்கப்பட்ட பழைய மாணவர் சங்கம் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் அச்சங்கத்தின்
செயலாளரினால் நிறைவேற்றுக் குழுவின் இணக்கப்பாட்டுடன் தெரிவுசெய்யப்படுகின்ற, அல்லதுஅங்கீகரிக்கப்பட்ட பழைய மாணவர் சங்கம் இல்லாதவிடத்து இதற்கென விஷேடமாக அழைக்கப்படுகின்ற பழைய மாணவர்களின் விஷேட கூட்டத்தில் தெரிவுசெய்யப்படுகின்ற பழையமாணவர்.
சிதம்பரக்கல்லுரி மாணவர் எண்ணிக்கைக்கு 02 அங்கத்தவர்கள்,

04. வழிகாட்டுபவர் என்றவகையில் வலயக்கல்விப் பணிப்பாளர் அல்லது அவரால் பெயர் குறிப்பிடப்படும்வலயக் கல்விப் பணிமனையின் அல்லது கோட்டக் கல்வி பணிமனையின் பதவி நிலைஉத்தியோகத்தர் ஒருவர் (இந்த பிரதிநிதியோடு வலய பணிப்பாளர் மாதாந்த கூட்டத்தில்
கலந்துரையாடி பிரச்சசைகள் ஏற்படும் பட்சத்தில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்)

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம்.

பாடசாலையால் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காகப் பாடசாலைச் சமூகத்தைப் பாடசாலையுடன் இணைத்துக் கொண்டு பாடசாலை மட்டத்தில் அபிவிருத்தி நடைபெற வேண்டும். ஆகவே பாடசாலைச்சமூகத்துடன் பாடசாலைமட்ட அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடல் மற்றும் அறிவூட்டல் அவசியமாகும். எனவே அதிபரால் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமானது சகல வருடங்களிலும் மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக நடாத்தப்படவேண்டும். 

01.பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்திற்கு மேலதிகமாகத் தேவையிருப்பின் விஷேட பொதுக்கூட்டத்தை நடாத்தலாம்.

02. இப் பொதுக்கூட்டத்திற்காக மேலே பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் கட்டமைப்பு ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அங்கத்தவர்களையும் சமூகமளிக்கச் செய்தல் வேண்டும்.

03.பொதுக் கூட்டம் பாடசாலை அபிவிருத்திச் சங்கத் தலைவராலேயே கூட்டப்பட வேண்டும்.(அதிபர்பதவியதிகாரத்தின் படி அபிவிருத்தி சங்கத்தின் தலைவராவர்)

04.மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக நடத்தப்படுகின்ற பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்தப்பொதுக்கூட்டத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பாடசாலை அபிவிருத்திக் குழுவின் புதிய அங்கத்தவர்கள் (இரு வருடங்களுக்காக) கீழே பாடசாலை அபிவிருத்திக்குழு மற்றும் கட்டமைப்பும் பகுதியிற் குறிப்பிடப்பட்டவாறு தெரிவு செய்துநியமிக்கப்பட வேண்டும். இக்குழு பாடசாலை அபிவிருத்தி சங்க நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டும்) அவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற உத்தியோகத்தர்களின் பெயர், பதவி மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பவற்றுடன் கூடிய அறிக்கை வலயக் கல்விப் பணிப்பாளர்களால் வலயக் கல்விக்காரியாலயத்தில் பேணப்படுதல் வேண்டும்.

05.முன்னைய இரு வருடங்களில் பாடசாலை அபிவிருத்திக் குழுவில் அங்கத்தவராகக் கடமையாற்றியவர்களில் யாரேனும் ஒருவரை மீண்டும் அங்கத்தவராக நியமிக்க வேண்டுமென அபிப்பிராயப்படின் பெரும்பான்மை விருப்பத்துடன் அவரை நியமிக்க முடியும்.

06. பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் கடந்த வருடத்தின் கணக்கு அறிக்கை, முன்னேற்ற மீளாய்வு அறிக்கை, எதிர்வரும் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள திட்டங்களை முன்வைக்கப்பட வேண்டியதுடன், வருடாந்த வரவு செலவுத் திட்டத்திற்கும் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

07.பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் விஷேட கூட்டத்தைப் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் 2/3 பங்கினரின் வேண்டுதலின் பேரில் அல்லது பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்களின் 1/3 பங்கினரின் வேண்டுதலின் பேரில் கூட்ட முடியும்.

08.கல்வி மற்றும் பாடசாலை முகாமைத்துவத் தேவைகளின் பொருட்டுப் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின்விஷேட கூட்டத்தைக் கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி சேவைகள் அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக்கல்விப் பணிப்பாளரால் கூட்ட முடியும்.

அங்கத்துவக் கட்டணம்

01.மேற்குறித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டுபவர் என்றவகையில் வலயக்கல்விப் பணிப்பாளர் அல்லது அவரால் பெயர் குறிப்பிடப்படும் வலயக் கல்விப் பணிமனையின் அல்லது கோட்டக் கல்வி பணிமனையின் பதவி நிலை உத்தியோகத்தர் ஒருவர் (இந்த பிரதிநிதியோடு வலய பணிப்பாளர் மாதாந்த கூட்டத்தில் கலந்துரையாடி பிரச்சசைகள் ஏற்படும் பட்சத்தில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்) கூறப்பட்டுள்ள நபர்களைத் தவிர ஏனைய அங்கத்தவர்கள் அனைவரும் அங்கத்துவப் பணத்தைக் கொடுத்து அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

02.பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் அனுமதிக்கப்பட்டதன்படி வருடத்திற்கு ரூபா (50.00) ஐம்பதுக்குக் குறையாதவாறும், ரூபாஅறுநூறுக்கு (600.00) மேற்படாதவாறும் அங்கத்துவப்  பணம் தீர்மானிக்கப்பட்டு அறவிடப்பட வேண்டும்.

பாடசாலை அபிவிருத்திக் குழு

தேசிய கல்விக் கொள்கைச் சட்டகத்தினுள் எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை அடையும் முகமாகப் பாடசாலைக்காக இனங்காணப்பட்டுள்ள தேவைப்பாடுகளுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள கிரம உபாயங்கள், அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பாகத் தீர்மானங்கள் எடுத்தல் , மற்றும்  வழங்கல் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுதல ; என்பவற்றில் அவதானமாக இருத்தல் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் வகை கூறலாகும்.

பாடசாலை அபிவிருத்திக்குழு மற்றும் கட்டமைப்பு

இக்குழுவில் பாடசாலை அதிபர், ஆசிரிய பிரதிநிதிகள், பெற்றோரது சார்பில் பிரதிநிதிகள், பழைய மாணவர் சார்பில் பிரதிநிதிகள் மற்றும் வலயக் கல்விக் காரியாலயத்தின் பிரதிநிதி ஒருவர் ஆகியோர் உள்ளடங்கியிருக்க வேண்டும்.

01.சங்கத்தின் தலைவர்

02.சிதம்பரகல்லூரியின் ஆசிரியர் தொகைக்கு 5 அங்கத்தவர்கள்

இவ் அங்கத்தவர்கள் பாடசாலை அதிபரின் தலைமையில், நிரந்தர ஆசிரியர் குழாத்தின் 2/3 பங்கினருக்குக் குறையாத எண்ணிக்கையினரின் சமுகமளித்தலுடன் நடைபெறும் ஆசிரியர் குழுக் கூட்டத்தில் பெரும்பாலானவர்களது இணக்கப்பாட்டுடன் தெரிவுசெய்யப்பட்டு அபிவிருத்திச் சங்கத்தில் முன்வைத்து அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும்.

03.சிதம்பரகல்லூரியின் பெற்றோர் தொகைக்கு 4 அங்கத்தவர்கள்

பெற்றோரின் அங்கத்துவம் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பொதுக் கூட்டத்தின்போது பாடசாலை மாணவர்களின் பெற்றோர்/சட்டரீதியான பாதுகாவலர் ஆகியோரால் முன்மெழியப்பட்டு, வழிமொழியப்பட்டுத் தெரிவுசெய்யப்பட வேண்டும். பெற்றோரின் அங்கத்துவம் பாடசாலையின் ஆரம்பப் பிரிவு (1-5) மற்றும் இடைநிலைப் பிரிவுகளைப் (6-13) பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட
வேண்டும்.

04.பழையமாணவர்களிடையே இருவரை பாடசாலையின் பழைய மாணவர்கள் குறிப்பிடப்பட்டவாறு பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் பழைய மாணவர்களில் இருந்து தெரிவுசெய்ய வேண்டும்.

05.வலயக் கல்விக் காரியாலயத்தின் ஆளணி வளத்திற்கேற்ப கல்வி அதிகாரி/உத்தியோகத்தரை நியமிப்பது வலயக் கல்விப் பணிப்பாளரால் தீர்மானிக்கப்பட வேண்டும்.

பாடசாலை அபிவிருத்திக் குழுவின் பதவிகள் மற்றும் செயற்பாடுகள்

பாடசாலை அபிவிருத்திக்காக நியமிக்கப்படுகின்ற பாடசாலை அபிவிருத்திக் குழுவிற்குப் பாடசாலை தொடர்பாக ஒரு சில தீர்மானங்களை எடுப்பதற்கு அதிகாரம் உள்ளது. அதில் பதவிநிலை வகிப்பவர்கள் கீழே குறிக்கப்பட்டவாறு அமைய வேண்டியதுடன், பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படவேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டு பதவி வகிப்போர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் வருடாந்த பொதுசபை கூட்டம் மற்றும் மற்றும் தேவைக்கேற்றவாறு கூட்டப்படும் கூட்டங்களை நடத்த வேண்டும்.

தலைவர்

அதிபர் உத்தியோகபூர்வ அதிகாரத்தின் ஊடாகத் தலைவராக நியமிக்கப்படுவார். பாடசாலை அபிவிருத்திக் குழுவின் உயர்ந்தபட்சப் பங்கேற்பினை மிகுந்த நியாயமான தீர்வுகளை எட்டுவதற்காகச் குழுவின் பணிகளை முன்னெடுத்து மேற்கூறப்பட்ட கொள்கைகள் மற்றும் நோக்கங்களை உயரிய மட்டத்தில் எட்டுவதற்காகப் பொறுப்பாய் இருக்க வேண்டும். பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்குரிய
சகல ஆவணங்களையும் பாதுகாப்பாக பாடசாலையின் உள்ளேயே தமது பொறுப்பில் வைத்திருக்க வேண்டியதுடன் அவ்வாவணங்கள் கல்வி அமைச்சினால் அல்லது மாகாணக் கல்வி அமைச்சு அல்லது திணைக்கத்தினால் அல்லது வலயக் கல்வி அலுவலகத்தினால் பரிசீலனைக்கு அல்லது கணக்காய்வுக்குக் கோரும் சந்தர்ப்பத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதிபர் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினதும் பாடசாலை அபிவிருத்தி செயற்குழுவின் தலைவரென்ற வகையில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினதும் பாடசாலை முகாமைத்துவ குழுவின் நடவடிக்கைகளையும் கூட்டங்களையும் மேற்கொள்ளவேண்டும்)

செயலாளர்

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பெரும்பான்மை விருப்பத்தின் பேரில் செயலாளர் பதவிக்காக பெற்றோரில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். ஆசிரியர் ஒருவர் பெற்றோராக இருக்கின்ற பட்சத்தில் அவரைச் செயலாளர் பதவிக்கு நியமிக்க முடியாது. இச் செயலாளர் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் என்றவகையில் உரிய கூட்டங்களின் போது செயற்படவேண்டும். தலைவரின் ஆலோசனைக்கு அமைய அல்லது பாடசாலை அபிவிருத்திக் குழுவின் அங்கத்தவர்களின் (2/3) பெரும்பான்மையினால் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பின் அல்லது கல்விச் செயலாளர்/கல்வி சேவைகள் அமைச்சர்/மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர்/மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்லது அவர்களது பொறுப்புக் கூறும் பிரதிநிதியின் ஆலோசனைப்படி பாடசாலை அபிவிருத்திக் குழுவினைக் கூட்ட முடியும். இதற்கு மேலதிகமாகச் சகல கூட்டறிக்கைகளையும், அங்கத்துவ ஆவணங்களையும் ஏனைய கடிதங்களையும் முறையாகப் பேணி உரிய சந்தர்ப்பங்களின் போது சங்கத்திற்கு அவ்வறிக்கைகளைச்சமர்ப்பிக்கப்பட வேண்டும். குழுவுக்குரிய சகல
ஆவணங்களும் பாடசாலையில் வைத்திருப்பதற்குச் செயலாளர் பொறுப்பாக இருக்க வேண்டும்.

பொருளாளர்

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினை தழுவும் வகையில் பாடசாலை அபிவிருத்தி செயற்குழுவில் பொருளாளர் பதவிக்காக ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்காக சகல மூலங்களிலிருந்தும் கிடைக்கப் பெறும் பணம், அன்பளிப்புகள், பொருட்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்காக பாடசாலை அபிவிருத்திக் குழுவின் பொருளாளரினால்
ஏற்றுக்கொள்ளப்பட்டு ‘பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின்’ பெயரில் முறையான தொடரிலக்கத்துடன் கூடிய பற்றுச் சீட்டினை வழங்க வேண்டும். பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மூலம் அவ் அச்சிட்ட தொடரிலக்கமிடப்பட்ட பற்றுச்சீட்டுப் புத்தகத்தினை அச்சிட முடிவதுடன் அச் சகல பற்றுச் சீட்டிலும்வலயக் கல்விப் பணிப்பாளரது உத்தியோகபூர்வ முத்திரை இடப்படல் வேண்டும்.